டெல்லி விமான நிலையம் தாக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு விமான நிலைய நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
FATEH-2 ஏவுகணைகளைக் கொண்டு டெல்லி விமான நிலையம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகவும் வதந்தி பரப்பப்பட்டது.
இதற்கு, டெல்லி விமான நிலையம் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என டெல்லி விமான நிலைய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.