சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முறையாகக் குடிநீரை வழங்குமாறு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சந்திரிபிள்ளை வலசு, வேட்டைக்காரனூர் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால், கடந்த ஏழு மாதங்களாகச் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அதிகாரிகளைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.