நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்குச் செல்ல மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டிருந்ததால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் ட்ரோன் மூலம் தீவரமாகக் கண்காணித்தனர்.
தற்போது யானை குன்னூர் பகுதிக்கு இடம் பெயர்ந்ததால் சுற்றுலாப் பயணிகளுக்கு 4 நாட்களுக்குப் பின் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் தொட்ட பெட்டா மலைச் சிகரத்தைக் காண வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.