திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. வெள்ளைக் குதிரை வாகனத்தில், பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.