மேட்டுப்பாளையம் அருகே உள்ள எல்லை கருப்பசாமி கோயிலில் 18 சித்தர்கள் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஒன்னிபாளையம் கிராமத்தில் உள்ள எல்லை கருப்பசாமி கோயிலில், ஒரே தூணில் 18 சித்தர்கள் சிலை நிறுவப்பட்டு அதனைப் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்னர், கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை மீனா, நடன இயக்குநர் கலா ஆகியோரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.