வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு, அந்நாட்டு இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் காக்க, அவாமி லீக் கட்சி மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, இந்த தடை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.