சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நாச்சியமத்தாள் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு விரட்டு மாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
தளக்காவூரில் நாச்சியமத்தாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கைப்புறா பந்தயம் எனப்படும் விரட்டு மாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இந்த போட்டியில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாடுகள் கலந்து கொண்ட நிலையில், கைகளில் மாட்டைப் பிடித்துக் கொண்டு வீரர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடி வெற்றி இலக்கை அடைந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டிற்கு முதல் பரிசாக 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. மாட்டின் உரிமையாளர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.