திருமணங்கள் அல்லது தனியார் நிகழ்வுகளில் அதிகப் பணத்திற்காக நடிகர்கள் நடனமாடுவதில் எந்த தவறும் இல்லை என நடிகர் நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், திருமணங்கள் அல்லது தனியார் நிகழ்வுகளில் அதிகப் பணத்திற்கு நடனமாடும் வாய்ப்பு கிடைத்தால் தானும் அதைச் செய்வேன் எனத் தெரிவித்தார்.
அது தங்கள் தொழிலின் ஒரு பகுதி எனக் கூறிய நவாசுதீன் சித்திக், நடிகர்கள் அனைவருமே பொழுதுபோக்கு கலைஞர்கள்தான் எனவும் கூறியுள்ளார்.