விஜய் சேதுபதி நடித்துள்ள ஏஸ் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடித்து முடித்த அவரது 51-வது படமான ‘ஏஸ்’ இறுதிக்கட்டத்தில் உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி பல வித்தியாசமான கெட்டிப்புகளில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதியுடன் அனைத்து காட்சிகளிலும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.
சமீபத்தில் ‘ஏஸ்’ படத்தின் ‘உருகுது உருகுது’ எனத்தொடங்கும் முதல் பாடல் வெளியானது. இந்நிலையில் தற்போது ஏஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.