சசிகுமார் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் படக்குழுவை அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த மே 1-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.