ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த தமிழக மாணவர்கள் 38 பேர் டெல்லி வந்தடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பயின்று வரும் தமிழக மாணவர்களில் தற்போது வரை 118 பேர் டெல்லி வழியாகத் தமிழகம் திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் 38 தமிழக மாணவர்கள் டெல்லி வந்தடைந்தனர்.
தமிழ்நாடு இல்லம் வந்தடைந்த மாணவர்களைத் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், போர் பதற்றம் காரணமாக ஜம்மு-காஷ்மீரில் இருந்து வெளியேற வேண்டாம் எனக் கல்லூரி நிர்வாகம் தடுத்ததாகத் தெரிவித்தனர்.
இருப்பினும், தமிழக அரசு அறிவித்த உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு பத்திரமாக டெல்லி திரும்பியதாகக் கூறினர்.