பஹல்காம் தாக்குதலில் படுகாயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரனை நேரில் சந்தித்து தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நலம் விசாரித்தனர்.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் வயிற்றுப் பகுதியில் குண்டடிபட்டுப் படுகாயமடைந்தார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவரை, தமிழ்நாடு அரசின் டெல்லிக்கான சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.