பலுசிஸ்தானை தனி நாடாக அறிவித்த கிளர்ச்சியாளர்கள், அரசு அலுவலகங்களில் பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றி வருகின்றனர்.
பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி நீண்ட காலமாகப் போராட்டம் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், பலுசிஸ்தானின் பல பகுதிகளைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள், அரசு அலுவலகங்களில் உள்ள பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றி வருகின்றனர்.
இதையடுத்து, பலுசிஸ்தானை தனி நாடாக அறிவித்துள்ள கிளர்ச்சியாளர்கள் குழுவினர், இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், தங்கள் நாட்டை அங்கீகரிக்கும்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்லியில் தங்களது தூதரகத்தைத் திறக்க அனுமதிக்குமாறும் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.