பெண்களுடைய மேம்பாட்டிற்காக 33 சதவீத இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியவர் பிரதமர் மோடி என மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சேவாபாரதி, ஸ்ரீ சமயவல்லி தாயார் அன்பு இல்லம் அறக்கட்டளையின் 15-ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து, அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த அவர், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் என்கிற மாபெரும் இயக்கத்தை நாடு முழுவதும் பிரதமர் மோடி நடத்திக் கொண்டிருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான செய்திகளை வழங்கிய கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் குறிப்பிட்டு பெண்களின் சாதனையை அவர் புகழ்ந்தார்.
பெண்களுடைய மேம்பாட்டிற்காக 33 சதவீத இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியவர் பிரதமர் மோடி எனவும் எல்.முருகன் தெரிவித்தார்.