வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் பேசிய ராமதாஸ், கூட்டணி பற்றி தான் முடிவு செய்வேன் எனவும், அதை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
மேலும், அந்த கோஷ்டி, இந்த கோஷ்டி என்று என பேசிக்கொண்டிருந்தால் பதவி பறிபோய்விடும் எனவும் கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.