தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என, அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் அருகே நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்தும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனமில்லை என தெரிவித்தார்.
பலமுறை ஆட்சிக்கு வருவதற்கு உதவிய தங்களுக்கு திமுக திரோகம் இழைத்து வருவதாகவும், “நல்ல கல்வி கொடுத்தால் இளைஞர்கள் நல்ல வேலைக்கு செல்வர்; ஏன் மதுவுக்கு அடிமையாக போகிறார்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.