உதகையில் 2 நாட்களாக நடைபெற்று வந்த நாய்கள் கண்காட்சி நிறைவு பெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது மலர் கண்காட்சி, ரோஜா காட்சி, பழக்கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. இந்நிலையில், சவுத் இந்தியன் கேனல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி 2 நாட்கள் நடத்தப்பட்டது.
இதில், 55 வகையான 450 நாய்கள் பங்கேற்றன. கீழ்படிதல் போட்டி, நாய்களின் அணிவகுப்பு உள்ளிட்டவை அப்போது நடத்தப்பட்டது. கோல்டன் ரெட் ரீவர், பிரஞ்ச் புல்டாக், பீகில், ஜெர்மன் செப்பர்டு, பிளாக் செப்பர்டு, டால்மேசியன், கிரேட் டான், சிப்பி பாறை, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு நாய்கள் கலந்துகொண்டன.