அண்ணாமலையார் கோயிலில் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 14 கிலோ மீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர்.
விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்தனர். அப்போது, விழுப்புரம் – காட்பாடி பயணிகள் ரயிலில் இடம் பிடிக்க பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்து சென்றனர்.