குருப்பெயர்ச்சியையொட்டி, தென்காசி மாவட்டம் புளியரை பகுதி தட்சிணாமூர்த்தி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி, புளியரை பகுதி தட்சிணாமூர்த்தி கோயிலில் மூலவர் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், மதுரை சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை குரு பகவான் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அபிஷேப ஆராதனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.