மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் சில மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு ஜூன் 1-ந்தேதி முதல் கட்டமாகவும், செப்டம்பர் 1-ந்தேதி இரண்டாவது கட்டமாகவும் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த விலை உயர்வு 90 ஆயிரம் ரூபாய் முதல் சுமார் 12 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த விலை உயர்வுக்குக் கடந்த நான்கு மாதங்களில் யூரோவிற்கு எதிரான இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மதிப்பு கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்ததே காரணம் என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.