திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருச்சி மாவட்டம், தென்னூர் பகுதியில் உள்ள உக்கிர மாகாளியம்மன் கோயிலில் கடந்த 4ஆம் தேதி சித்திரை தேர் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேர் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளிய நிலையில், ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.