நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது அனைத்து கார் மாடல்களிலும் 6 ஏர்பேக்ஸ் இருப்பதை ஒரு நிலையான அம்சமாக மாற்றப் போவதாக அறிவித்துள்ளது.
வாகனப் பாதுகாப்பில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவரும் ஒழுங்குமுறை மற்றும் நுகர்வோர் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய மாற்றமாக நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஆல்டோ கே10, செலெரியோ, வேகன் ஆர் மற்றும் யூடிலிட்டேரியன் Eeco வேன் போன்ற மலிவு விலை மாடல்கள் 6 ஏர்பேக்ஸ்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.