மின்சார இருசக்கர வாகனப் பிரிவில் பிரபலமான ஒடிஸி எலக்ட்ரிக் நிறுவனம், வெறும் 42 ஆயிரம் ரூபாய் எனும் விலையில் ஒடிஸி ஹைஃபை என்ற புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஹைஃபை ஸ்கூட்டரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 89 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதில் 48 வோல்ட் மற்றும் 60 வோல்ட் ஆகிய இரண்டு பேட்டரி விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. இந்த பேட்டரிகளை சார்ஜ் செய்ய 4 முதல் 8 மணி நேரம் ஆகும் என்று நிறுவனம் கூறுகிறது.