சித்ரா பௌர்ணமியையொட்டி, திருப்பூர் சித்திரகுப்தர் கோயிலில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சித்திரகுப்தர் கோயிலில் சித்ரா பௌர்ணமி நாளன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், நடப்பாண்டு சித்திரா பௌர்ணமியை ஒட்டி, சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, புராணம் படித்து உபசார வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த நாளில் சித்திரகுப்தரை வழிபட்டால் பாவ கணக்கை தீர்த்து, புண்ணிய கணக்கை எழுதுவார் என நம்பப்படுவதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.