கடந்த மார்ச் 2025-ல் 2.17 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை சேர்த்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது இந்திய மொபைல் துறையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களிலும் சேர்த்து மொத்தம் பெற்றுள்ள 2.93 மில்லியன் சப்ஸ்கிரைபர்களில், ஜியோ நிறுவனம் மட்டுமே தனித்து 2.17 மில்லியன் புதிய சப்ஸ்கிரைபர்களை சேர்த்துள்ளது.
இது தொழில்துறையில் சேர்க்கப்பட்ட மொத்த சப்ஸ்கிரைபர்களில் 74% ஆகும். சமீபத்தில் TRAI வெளியிட்ட இந்தத் தரவுகளின்படி, ஏர்டெல் 1.25 மில்லியன் யூஸர்களைப் பெற்றுள்ள அதே நேரத்தில், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் யூஸர்களின் எண்ணிக்கையில் குறைவும் காணப்பட்டது.