கொள்ளிடம் ஆற்றில் திடீரென ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ராமநல்லூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில், ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது.
திடீரென ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அவர்கள் அருகில் சென்று பார்க்க முயன்றபோது, அருகில் வர வேண்டாம் என ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.
அப்பகுதியில் அதிகளவில் மக்கள் கூட ஆரம்பித்ததால், தரை இறங்கிய ஹெலிகாப்டர் மீண்டும் பறந்து சென்றது. பயிற்சி மேற்கொள்வதற்காகக் கொள்ளிடம் ஆற்றில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக அரியலூர் மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.