பிளஸ் டூ தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் விழுப்புரத்தில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் தேர்வு எழுதிய அனைவருமே வேதியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரிக்கை வலுத்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மொத்தமாக 167 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவருமே வேதியியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளதாகத் தேர்வு முடிவுகள் வெளியானது.
ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய அனைவருமே முழு மதிப்பெண் பெற்ற சம்பவத்தில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ள கல்வியாளர்கள், இது குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி உள்ளனர்.
தங்களின் ஆட்சியில், கல்வியின் தரம் மேம்பட்டுள்ளதாகப் பெருமை பேசுவதைத் தவிர்த்துவிட்டு அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.