ஆப்பிள் தனது ஐபோன் மாடல்களின் டிசைன்களை மறு செய்யத் திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
அதன்படி ஆப்பிள் தனது ஐபோன் 17 மாடலை தட்டையான வடிவமைப்பில் மீண்டும் மெல்லியதாக உருவாக்கக்கூடும் எனவும், இது கூர்மையான விளிம்புகளுடன் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், ஏ19 பயோனிக் சிப் மூலம் இதன் செயல்திறனை அதிகரிக்கவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஏஐ தொழில்நுட்பம், வேகம் மற்றும் பேட்டரி ஆயுளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.