பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதலில் வீர மரணமடைந்த, BSF உதவி ஆய்வாளரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் கடந்த 10-ம் தேதி நடந்த பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லை தாண்டிய தாக்குதலில், பீகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த BSF உதவி ஆய்வாளர் முகமது இம்தியாஸ் வீர மரணம் அடைந்தார்.
அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், தேசியக்கொடி போர்த்தப்பட்ட உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.