போர் பதற்றம் தணிந்து வரும் நிலையில் ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஜம்மு-காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவி வந்தது.
இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதால், போர் பதற்றம் தணிந்து அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீநகர் தால் ஏரிக்குச் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வரத் தொடங்குவார்கள் என வியாபாரிகள் மற்றும் படகோட்டிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.