பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே, பிளாக்கில் மதுபானங்களை விற்பனை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அந்தக் கடையில் பார் ஏலம் எடுத்த நபர் மதுபானங்களை டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே, காலை 6 மணி முதல் 12 மணி வரை, புளியந்தோப்பில் வைத்து விற்பதாகப் புகார் எழுந்துள்ளது.
இவை அனைத்தும் இரு மடங்கு விலையில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கள்ளத்தனமாக மது பானங்களை விற்பனை செய்யும் வீடியோ காட்சி வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.