கத்தார் நாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்ற பட்டத்திருவிழாவை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.
பழைய தோஹா துறைமுகம் அருகே நடைபெற்ற இந்த பட்டத்திருவிழாவில் பல வண்ணங்களில், பெரியது முதல் சிறியது வரை ரக ரகமான பட்டங்கள் வானை வட்டமிட்டு அலங்கரித்தன.
மக்களின் ஆரவாரத்திற்கிடையே கோலாகலமாக நடைபெற்ற இந்த பட்ட திருவிழாவை அங்குக் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.