மெக்சிகோவில் நடந்த பலூன் திருவிழாவில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சகாடெகாஸ் நகரின் என்ரிக்யூ எஸ்திராடா பகுதியில் நடந்த பலூன் திருவிழாவில், ராட்சத பலூன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் அதிலிருந்த ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வானில் பற்றி எரியும் ராட்சத பலூனில் இருந்து தொங்கும் கயிற்றைப் பிடித்து தொங்கியபடி ஒருவர் உயிருக்குப் போராடும் காட்சி இணையத்தில் வைரலாகி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.