கன்னியாகுமரியில் அமைந்துள்ள காளிமலையில் நடைபெற்ற சித்ரா பவுர்ணமி பொங்கல் வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளது காளிமலை. அங்கு நடைபெற்ற சித்ரா பவுர்ணமி பொங்கல் வழிபாட்டை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான அடுப்புகளில் பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பாரம்பரிய பூஜையில் 48 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.