மயிலாடுதுறை ஐயாரப்பர் சுவாமி கோயிலில் ஏழூர் திருவிழா எனப்படும் சித்திரை சப்தஸ்தான பெருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அறம் வளர்த்த நாயகி சமேத ஐய்யாறப்பர் சுவாமி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் 3 தேர்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
கோயிலில் இருந்து நான்கு ரத வீதிகள் வழியாகச் சென்ற தேர், மீண்டும் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.