நடிகர்கள் ரஜினி மற்றும் கமலை இணைந்து நடிக்க வைக்க பல முயற்சிகளை செய்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நாயகனாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியானதாகவும், ஆனால் கரோனாவால் அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், இவர்கள் இருவரையும் கேங்ஸ்டர்களாக காட்டும் கதையை வைத்திருந்தேன் எனவும் லோகேஷ் கூறியுள்ளார்.