அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியுள்ள மனிதர்கள் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது. ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்த வித்தியாசமான கதைக்களம் என்பதால் அனைவரிடமும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்திலேயே வெளியாகி மக்களின் கவனத்தைப் பெற்றது. விரைவில் இத்திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.