திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியின் இரண்டாம் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பௌர்ணமி மற்றும் மாதம்தோறும் வரும் பௌர்ணமி கிரிவலம் உலகப் பிரசித்தி பெற்றது.
சித்ரா பௌர்ணமி நேற்று முன்தினம் இரவு 8:47 மணிக்குத் தொடங்கி நேற்றிரவு 10:45 மணிக்கு நிறைவடையும் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்றிரவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து, அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர்.