நடிகை அதிதி ஷங்கர் தனக்குத் தெலுங்கு பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.
’பைரவம்’ என்ற படத்தின் மூலம் அதிதி சங்கர் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தனது முதல் தமிழ்ப் படத்தைப் பார்த்த இயக்குனர் விஜய், பைரவம் படத்திற்குத் தான் சரியாக இருப்பேன் என உணர்ந்து இந்த வாய்ப்பை கொடுத்தார் எனத் தெரிவித்தார்.
மேலும், தெலுங்கில் நடிக்கும் தனது நீண்ட கால கனவு நனவாகியுள்ளதாகவும் அதிதி தெரிவித்தார்.