ராசிபுரம் அருகே நள்ளிரவு துப்பாக்கியுடன் ஒரு ஜோடி இருசக்கர வாகனத்தில் வலம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் அருகே நள்ளிரவு 12 மணியளவில் ஆண், பெண் ஜோடி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தை நிறுத்திய ஆண் நபர், துப்பாக்கியை லோடு செய்து சுடும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் சுற்றித்திரியும் நாய்களை மர்மநபர் சுட முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.