ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் வழங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிரசித்தி பெற்ற நம்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சித்ரா பௌர்ணமியையொட்டி, காவிரி ஆற்றில் கஜேந்திரமோட்சம் வழங்கும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
காவிரி ஆற்றில் கோயில் யானை ஆண்டாளின் காலை, முதலை இழுப்பது போன்றும், யானையை நம்பெருமாள் காப்பாற்றி மோட்சம் அளிப்பது போன்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.