வருங்காலங்களில் இனி கதாநாயகனாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற முடிவில் திட்டவட்டமாக இருப்பதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம் வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையே ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, வருங்கால படங்களில் இனி கதாநாயகனாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருப்பதாகவும், கடந்து வந்த பாதையில் மீண்டும் பயணிப்பது மிகக் கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.
‘மண்டாடி’ என்ற தனது அடுத்த படத்திற்காக மீண்டும் உடலை வருத்தி நடிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.