இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரரை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்கராஸ் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ரோம் நகரில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றில் அல்கராஸ், செர்பிய வீரரான லாஸ்லோ டிஜெரே உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கார்லஸ் அல்கராஸ் 7-க்கு 6, 6-க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் 4-ம் சுற்று ஆட்டத்தில் அல்கராஸ் ரஷ்யாவின் கரேன் கச்சநோவ் உடன் மோதவுள்ளார்.