சிவகாசி அருகே திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் உள்ள சுகாதார கட்டடத்தை இடித்த வருவாய்த் துறையினரைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் உள்ள சுகாதார கட்டடத்தை அகற்றுமாறு சார் ஆட்சியர் உத்தரவிட்டார். சுகாதார கட்டடத்தை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சுகாதார வளாகம் இடிப்பதற்கான தீர்மானம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மேயர் தெரிவித்தார்.
இந்நிலையில், அதிகாலை, திடீரென ஜேசிபி வாகனம் மூலமாக செங்குளம் கண்மாயில் உள்ள சுகாதார கட்டடத்தின் முன் பகுதியை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினார்.
இதனை அறிந்த பெண்கள் வருவாய்த்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், வருவாய்த்துறையினர் கட்டடத்தை இடிக்காமல் பாதியிலேயே திரும்பிச் சென்றனர்.