பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளின் தரப்பில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,
குற்றவாளிகள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்றும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாமான தீர்ப்பு கிடைத்துள்ளது என்று சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திர மோகன் கூறினார்.
சாட்சிகள் உள்ளதால் இதே தண்டனை நிலை நிறுத்தப்படும் என நம்புகிறேன் என தெரிவித்தவர், புகார்கள் தனித்தனியாக இருந்தாலும் ஒரே குற்றத்தில் தொடர்புடையது என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார்.
குற்றவாளிகளில் 2 பேருக்கு அதிக பட்ச தண்டனை காலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் சபரிராசனுக்கு 4 ஆயுள் தண்டனை, மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளது என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் குறிப்பிட்டார்.