கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் அண்மையில் உரையாற்றிய ராகுல் காந்தி ராமர் ஒரு புனைக்கதை கதாப்பாத்திரம் என்று கூறினார்.
இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்து மத நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தியதாகப் பலரும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 19-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.