ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே ஓட்டுநர் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை இயக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை வழியாக பெருந்துறை நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில், ஓட்டுநர் செல்போன் பேசியபடியே பேருந்தை இயக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.