பாளையங்கோட்டையில் திமுக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த கீழ் முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த செல்வசங்கர், பாளை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இவரது வீட்டின் முன்பு தீடீரென பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 4 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.