சிரியா மீதான அமெரிக்க விதித்த பொருளாதார தடைகளை அதிபர் டிரம்ப் நீக்கியுள்ளார்.
அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சவுதி அரேபியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இளவரசர் முகமது பின் சல்மானுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், சிரியா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை நீக்குவதாக அறிவித்தார். சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷராவின் நிர்வாகத்திற்கு இது பெரிய உதவியாக இருக்கும் எனவும் சிரியாவிற்கு முன்னேறும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.