மதுரை சித்திரை திருவிழாவை ஒட்டி வைகையாற்றில் கள்ளழகர் தடம்பார்க்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் வைகை ஆற்றில் கள்ளழகர் தடம்பார்க்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளினார்.
அப்போது கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டவாறு ஏராளமான பக்தர்கள் மனமுருகி வழிபாடு நடத்தினர்.